தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உச்சத்தில் காய்கறி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் - vegetable rate in chennai

தொடர் பண்டிகை, கேரள, கர்நாடக, உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை காரணமாக காய்கறி விலை உச்சத்தை தொட்டுள்ளது.

அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

By

Published : Oct 16, 2021, 7:19 PM IST

Updated : Oct 16, 2021, 8:18 PM IST

சென்னை:2 வாரங்கள் முன்பு வரை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(அக்.16) 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி மட்டுமின்றி கத்தரிக்க, வெங்காயம் போன்ற மற்ற காய்கறிகளும் விலை அதிகரித்து உள்ளது.

காய்கறி விலைப் பட்டியல்..!

தக்காளி - ரூ.60
வெங்காயம் - ரூ.40
அவரைக்காய் - ரூ.15
பீன்ஸ் - 50
பீட்ரூட் - ரூ.20
வெண்டைக்காய் - ரூ.40
உருளைக் கிழங்கு - ரூ.25
முள்ளங்கி - ரூ.10
கத்தரிக்காய் - ரூ.35
கேரட் - ரூ.45
காளிபிளவர் - ரூ.40
முருங்கைக்காய் - ரூ.55
இஞ்சி - ரூ.60
பச்சை மிளகாய் - ரூ.30

கடந்த 1 வாரத்தில் காய்கறி விலை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது அரசாங்கம் நிர்ணயம் செய்த விலை. ஆனால் சில்லறை வியாபாரம் செய்பவர்கள் இந்த விலை உடன் 10 அல்லது 20 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்கின்றனர்.

வரத்து குறைவு

கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அதிகமான காய்கறிகள் அண்டை மாநிலமான கேரள, கர்நாடக ஆந்திர போன்ற இடங்களில் இருந்து வரும். தற்போது அங்கு தொடர்ந்து மழை காலம் என்பதால், காய்கறி வரத்து குறைந்துள்ளது. விலை ஏற்றத்துக்கு இது ஒரு முக்கிய காரணம் என கோயம்பேடு வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

உச்சத்தில் காய்கறி விலை

இல்லத்தரசிகள் வேதனை

இந்த விலை ஏற்றம் நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய இல்லத்தரசி ஒருவர், "2 வாரங்களுக்கு முன்பு வரை 2 அல்லது 3 கிலோ தக்காளி வாங்கி வைத்துக்கொள்ளவோம்.

ஆனால் தற்போது விலை அதிகரித்ததால், தற்போதைய தேவைக்கு மட்டும் வாங்கி கொள்கிறோம். மலிவான விலையில் சில இடங்களில் காய்கறி விற்பனை செய்தாலும், அது தரமாக இருப்பதில்லை. எனவே விலை குறைந்தால் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை வர உள்ளதால், அதற்குள் விலை குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:'பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவு... பாலியல் வன்புணர்வாக எடுத்துக்கொள்ள தேவையில்லை'

Last Updated : Oct 16, 2021, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details