தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கிய விசிக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! - DMK

சென்னை: திமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக மனு தாக்கல்செய்த விசிக மண்டல அமைப்புச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கி விசிக தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

vck
vck

By

Published : Mar 23, 2021, 6:30 PM IST

Updated : Mar 23, 2021, 7:55 PM IST

திமுக கூட்டணியில் விசிக ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் திட்டக்குடி தனித்தொகுதியில் திமுக வேட்பாளராக சி.வி. கணேசன் என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மண்டல அமைப்புச் செயலாளர் திருமாறன் என்கிற அய்யாசாமி கட்சியின் முடிவிற்கு எதிராக மனு தாக்கல்செய்திருந்தார். தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி விசிக தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு ஒதுக்கப்படாத திட்டக்குடி (தனி) தொகுதியில் மண்டல அமைப்புச் செயலாளர் சு. திருமாறன் என்கிற அய்யாசாமி வேட்புமனு தாக்கல்செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது.

உடனடியாக அம்மனுவைத் திரும்பப் பெற வேண்டுமென அவருக்குத் தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், அவர் அவ்வாறு திரும்பப் பெறாமல், சுயேச்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராகப் போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும்.

நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிக்கையாகும். கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள திருமாறனுடன் கட்சி சார்ந்து எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

Last Updated : Mar 23, 2021, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details