சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது உடன்பிறப்பு உணவகம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை
இது குறித்து அவர் பேசுகையில், “முதலமைச்சரின் ஆட்சியில் சமூகநீதி மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது. தமிழ் சமூகத்திற்கு ஆகச் சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார். கழக ஆட்சியில் மருத்துவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பிற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு ஊதியம் சிறப்பாக உள்ளது.
10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் 100 நாள்களில் நிறைவேற்றப்பட்டன. வேளாண் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து திட்டங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.