தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அக்டோபர் 2 மனித சங்கிலி.. காவல்துறை நல்ல பதிலை தரும் என எதிர்பாக்கிறோம்...திருமாவளவன் - For Seeking Permission for Human Chain

வரும் அக்.2 ஆம் தேதி மனித சங்கலி போராட்டத்திற்கு காவல்துறையினர் நல்ல பதிலை தருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 9:18 AM IST

சென்னை:தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வளர்ந்துவிடும் என நினைப்பது பகல்கனவு என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி அதன் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

சட்ட ஒழுங்கு பிரச்சனை:செய்தியாளர்களிடையே பேசிய கே.பாலகிருஷ்ணன், 'வரும் அக்.2 ஆம் தேதி சமூக நல்லிணக்க பேரணி நடத்த அனுமதியும் அதேபோன்று, ஆர்எஸ்எஸ் நடத்தும் 50 இடங்களில் பேரணி அதைத் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

ஏற்கனவே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்பு தடை செய்திருப்பது இந்த பிரச்சனை இடையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிப்பது சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று டிஜிபி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் தடை செய்ததை நாங்கள் வரவேற்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் மதவாத அமைப்பு அல்ல; மதவாத சக்திகளை, எதிர்த்து மத நல்லிணக்கத்தையும் மத நிகழ்ச்சியும் வற்புறுத்தக்கூடிய எங்களுடைய இயக்கத்திற்கு அனுமதி கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஆர்எஸ்எஸின் வளர்ச்சி;பகல்கனவு:எங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று காவல்துறை இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். நிச்சயமாக, எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க முடியாது என்று பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியது தொடர்பான கேள்விக்கு, வானதி சீனிவாசன் எப்பொழுதும் அரைவேக்காட்டுத் தனமாக தான் பேசுவார்கள். இப்படியெல்லாம் பேசினால் பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் வளர்ந்துவிடும் என்று நினைக்கின்றனர், அவர்களின் பகல்கனவு பலிக்காது' என்றும் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பேரணி அபத்தமானது: பின்னர் பேசிய திருமாவளவன், 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் பேரணி அக்.2 ஆம் தேதி நடத்த அனுமதி கேட்டு இருந்தோம். திராவிட கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்களும் பங்கேற்பதாக அறிவித்த நிலையில், திடீரென காவல்துறை மனித சங்கிலிக்கு அனுமதி இல்லை என்று மறுத்து இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒரு மதவாத மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இயக்கம் என்று அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்து எடுத்த நடவடிக்கை இருக்கும் சமயத்தில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கான காரணம் மிக அபத்தமாக இருக்கிறது.

காந்தி ஜெயந்தியை அசிங்கப்படுத்தவே பேரணி:ஆனால், அவர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக அக்.2 ஆம் தேதியை தேர்வு செய்திருப்பது, உள்நோக்கமாக இருக்கிறது. அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளைக் கொண்டாடுவோம் என்று கூறுகிறார்கள். விஜயதசமி கொண்டாட போகிறோம் என்கிறார்கள். வரும் அக்.5 ஆம் தேதி தான் விஜயதசமி வருகிறது. காந்தி ஜெயந்தி பண்டிகையை அசிங்கப்படுத்த வேண்டும், ஒதுக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு இவர்கள் செய்து வருகிறார்கள்.

மோதலுக்கு வழிவகுக்கும்: பெரியார் இவ்வளவு காலம், சமூகநீதி வாழ்க.. பெரியார் மண் வாழ்க.. என்றும் மண்ணில் ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் அனுமான்.. என்று முழுக்க விடக்கூடிய நிலைமையை அவர்கள் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கும் விதமாக செயல்படுகிறார்கள்.

எனவே, நாங்கள் அமைதியான முறையில் நடத்தும் அமைதியான மனித சங்கிலி முறையில் கைகோர்த்து நிற்க போகிறோம். எங்களுக்கு அனுமதி தர வேண்டும். அரசியல், சமூக நீதி இயக்கமாக செய்ய விரும்புகிறோம். விசிக கட்சியை தடை செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கம்; ஆனால், இது நிராசையாகும். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் கால் பதிப்பது என்பது நடக்காத விஷயம்.

காந்தி ஜெயந்தி அன்று காந்தி விதித்த சமூக பாதுகாப்பு, சமூக இயக்கம், சமூக நல்லிணக்கம் என்ற அடிப்படையில் பேரணி நடத்த நாங்கள் விரும்புகிறோம். ஆனால், சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பேரணி நடத்தும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் பொழுது, காந்தியடிகளுக்காக நாங்கள் நடத்தக்கூடிய இயக்கத்தைத் தடை செய்வது காந்தியடிகளேயே தடை செய்வதாக அர்த்தம். மேலும், ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து வரும் அக்.2 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு காவல்துறையினர் நல்ல பதிலை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறை மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம் - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details