சென்னை எழும்பூரில் நெல்லை - தூத்துக்குடி நாடார் சங்கம் சுமார் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருகின்றனர். கொட்டிவாக்கத்தில் சங்கத்திற்கு சொந்தமாக நெல்லை நாடார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இப்பள்ளியின் தாளாளரான வணிகர் சங்க பேரவைத தலைவர் விக்கிரமராஜா, பள்ளி கணக்குகளுக்கு பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையான கணக்கை விக்கிரமராஜா தாக்கல் செய்யாமல் முறைகேடாக ரூ.18 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக சங்க உறுப்பினர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில், சங்கம் சார்பில் கமிட்டி கூட்டம் அமைத்து கையாடல் குற்றத்தைப் பற்றி விக்கிரமராஜாவிடம் கேட்டுள்ளனர், அந்த குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.