சென்னை:நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிவேகமாக பரவிவந்தது. இதன்காரணமாக மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துதலை தீவிரப்படுத்துதல், கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவந்தது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, வார இறுதி நாள்களில் வழிபாட்டு தளங்களில் அனுமதி மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி முதல் வண்டலூர் உயரியல் பூங்கா மூடப்பட்டது.
இந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திவருகிறது. அதன்படி வழிப்பாட்டு தளங்களில் அனுமதி, இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரங்கு வாபஸ் உள்ளிட்ட தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.
அதனடிப்படையில், நாளை முதல்(பிப்.3) வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படஉள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 17ஆம் தேதி மூடப்பட்ட பூங்கா நாளை முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை உயிரிழப்பு