தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வள்ளுவர் கோட்டத்தில் குடிசைகள் அகற்றம்;பதற்றம்

வள்ளுவர் கோட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த குடிசை வீடுகள் அகற்றப்பட்டன.

Houses Demolished in valluvar Kottam thangavelu street, public occupancy in Corporation land, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குடிசைகள், மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த பொதுமக்கள்
வீட்டை இழந்து சாலையில் அமர்ந்திருக்கும் இளம்பெண்

By

Published : Dec 18, 2021, 10:29 PM IST

சென்னை:சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தங்கவேல் தெருவில் பொதுமக்கள் பலர் கடைகள், வீடுகள் ஆகியவற்றை கட்டி வசித்து வந்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததால் அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று அலுவலர்கள் அறிவுறுத்தல் செய்தும் பல மாதங்களாக வெளியேறாமல் அப்பகுதியிலேயே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிரடியாக அப்பகுதியில் இருக்கும் குடிசை வீடுகள், கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இன்று (டிசம்பர் 18) அகற்றப்பட்டது

வீட்டை இழந்து சாலையில் அமர்ந்திருக்கும் இளம்பெண்

போலீசார் குவிப்பு

இப்பணியை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், தங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி குடிசைகளை அகற்றப்படுவதாக குடிசைவாசிகள் குற்றம்சாட்டினார்கள்.

மாநகராட்சி நிர்வாகமோ பல முறை அறிவித்தும் வெளியேறாமல் அப்பகுதியில் இருந்து வருகின்றனர். அதனால்தான் இன்று அதிரடியாக பகுதியை அகற்றி வருகிறோம் எனத் தெரிவித்தனர். கடைகள், வீடுகள் ஆகியவற்றை அகற்றும்போது அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சிறு பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details