சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை'க்குப் பிறகு, மீண்டும் அவரது இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.
ஹார்ட்டின்களை அள்ளிச் சென்ற போஸ்டர்ஸ்
முன்னதாக இத்திரைப்படத்தின் "அப்டேட்" கேட்டு, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் புலம்பி வந்தனர்.
இந்த படத்தின் அப்டேட் வெளியாகாததையடுத்து, அஜித் ரசிகர்களை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்கள் வறுதெடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு வழியாக சில நாட்களுக்கு முன்னர் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ஹார்ட்டின்களை அள்ளிச் சென்றது.
அதன் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவான 'நாங்க வேற மாரி' முதல் பாடல் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
வலிமை கிளிம்ப்ஸ் வெளியீடு குறித்த ட்வீட் கிளிம்ப்ஸ் வெளியீடு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
மேலும் சில நாட்களுக்கு முன்னர் வருகின்ற பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனால் வருகின்ற பொங்கல், 'தல' பொங்கல் என அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில் விரைவில் படத்தின் டீசரும், இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட வீடியோ) இன்று மாலை 6.30 மணி அளவில் படக்குழுவால் வெளியிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் #ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:மகனுடன் ரஜினியை எதிர்க்கும் சீயான் விக்ரம்