தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்ஜிஆர் வாழ்வே ஒரு பத்தாண்டு திட்டம் - வைரமுத்து ட்வீட் - வைரமுத்து ட்வீட்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

vairamuthu
vairamuthu

By

Published : Dec 25, 2020, 1:30 AM IST

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் நேற்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

1917 - பிறக்கிறார்

1927 - நாடகம் நடிக்கிறார்

1937 - திரையுலகில் அறியப்படுகிறார்

1947 - கதாநாயகனாகிறார்

1957 - நாடோடி மன்னன் தயாரிக்கிறார்

1967 - சட்டமன்ற உறுப்பினர்

1977 - முதலமைச்சர்

1987 - வாழ்வு நிறைகிறார்

எம்ஜிஆர் வாழ்வே ஒரு பத்தாண்டுத் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details