தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வைகோ வலியுறுத்தல்! - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வைகோ வலியுறுத்தல்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Vaiko urges cancellation of 10th standared public exam
Vaiko urges cancellation of 10th standared public exam

By

Published : Apr 7, 2020, 4:22 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதச் சமூகத்தை அச்சத்தில் உறைய செய்திருக்கின்ற கரோனாவை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போவதால் தேர்வு எழுத துடித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் துவண்டுவிட்டனர்.

துள்ளி விளையாடும் இளம் பிஞ்சுகள் ஊரடங்கு உத்தரவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர். பொதுத்தேர்வு என்ன ஆகுமோ என்று மாணவர்களும் பெற்றோரும் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.

மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த பதினொன்றாம், 12ஆம் வகுப்பில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசு இந்தக் கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details