தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘விரும்பும் மக்களை திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைக்க வேண்டும்’ - வைகோ வலியுறுத்தல் - edappadi palanisami

சென்னை: திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

By

Published : Jul 24, 2019, 2:32 PM IST

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று 18ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடடுள்ள அறிக்கையில்,

"புதிய தென்காசி மாவட்டம் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், வருவாய் வட்டப் பகுதிகளின் வளர்ச்சிக்கு, தென்காசி மாவட்டம் பயன் உள்ளதாக அமைகின்றது. அதேவேளையில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை. கல்வி, மருத்துவத் தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்குச் சென்று வருகின்றார்கள். சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குப் போக்குவரத்துத் தொடர்புகள் எளிதாக இருக்கின்றன. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவிலுக்குக் கூடப் பேருந்துகள் கிடையாது. அப்படியானால் திருவேங்கடம், இளையரசனேந்தல், குருவிகுளம், தேவர்குளம் பகுதி மக்கள் எப்படிப் பயணிக்க முடியும்? சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள். எனவே இந்தப் பகுதிகள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details