தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2019, 10:58 AM IST

ETV Bharat / city

'உலக கோடீஸ்வரன் என்னை சந்திக்க கேட்ட அனுமதியையே மறுத்துவிட்டேன்' - வைகோ

சென்னை: ஸ்டெர்லைட் பிரச்னையில் என்னை சமரசம் செய்ய உலக கோடீஸ்வரன் என்னை சந்திக்க அனுமதி கேட்டதற்கு, முடியாது என மறுத்துவிட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

vaiko

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளான நேற்று மதிமுக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில், திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாடு நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறைவுரையாற்றினார். அப்போது அவர், ”நான் நலமாக இருக்கிறேன். தொண்டர்களின் உற்சாகம் என்னை இன்னும் பல காலம் நலமாக வைத்துக்கொள்ளும். ஈழத்தமிழருக்கு நான் நடத்திய போராட்டங்களைப் போல் எந்தக் கட்சியும் நடத்தியது இல்லை. கூட்டத்தை கூட்டி யார் வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் நாடாளுமன்றத்தில் 100 பாஜக எம்.பி.க்களுக்கு மத்தியில் தன்னந்தனியே ஒழியட்டும்... ஒழியட்டும்... இந்தி ஒழியட்டும் என்று கூறினேன். நம்மைவிட துணிவானவர்கள் என்று யாரும் இல்லை என்று சொல்லுங்கள்.

வைகோவின் நிறைவுரை

ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு வருந்துகிறேன். மூன்று பேரினுடைய தூக்கு கையிறை அறுத்து எரிந்தோம் என்ற தகுதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தவிர வேறெந்தக் கட்சிக்கு இருக்கிறது என்று கேளுங்கள்.

ஸ்டெர்லைட் வழக்கை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலத்தில், உலக கோடீஸ்வரன் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டான். நான் ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது என்று கூறினேன்.

அண்ணா திமுக அரசு என்று சொல்ல வருத்தம் கொள்கிறேன். மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாது காலடியில் கைகட்டி சேவகம் செய்கிறார்கள். தொண்டைக் குழியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நீதிமன்றத்தில் வாதாடியபோது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது. நாங்கள் தமிழ்நாட்டில் செய்த சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. இருப்பினும் இன்னமும் சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.

வைகோவின் நிறைவுரை

சனாதன சக்திகள் படையெடுத்து வருகின்றன, அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். பாஜக, மோகன் பகவத், இந்துத்துவ சக்திகள் என அனைவரும் கொண்டுவருவது மரக்குதிரை என்கிற மதத்தைதான். நாம் கோயிலுக்குப் பக்தியில் போகும்போது நம்மை வசக்கிவிடலாம் என்று கருதுகிறார்கள். அதனால்தான் நான் காஞ்சி கோயிலுக்குப் போனேன்.

நம்முடைய கோயில்கள்தான் நமது கலை பொக்கிஷங்கள். அந்தக் கோயில்களுக்கு நாம் எல்லோரும் செல்வோம். மசூதிக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். ஜெபக்கூடங்களுக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன்.

நீ பெரியாரிடமிருந்து மாறுபட்டு விட்டாயா என்று கேள்விகள் வரும். ஆழ்ந்து சிந்தித்துச் சொல்கிறேன், 1940-களில் பேசியதை 1960-களில் அண்ணா பேசவில்லை. நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமல்ல எதிரிகள் கைக்கு அதிகாரம் போய்விடக் கூடாது. அதற்கு போர் தந்திரத்தை மாற்று, கொள்கையை மாற்று. மத நம்பிக்கையில்லையா நீ கோயிலுக்குப் போகாத, ஆனால் போகின்றவர்களை ஏன் கேவலப்படுத்துகிறாய். அவன் விருப்பம் போயிட்டு போறான், நீ சொல்லாவிட்டாலும் 99 விழுக்காட்டினர் போய்க்கொண்டுதான் இருக்கின்றனர்” என அவர் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details