தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக - முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் - ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்த வைகோ

தமிழ்நாட்டில் வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திட வேண்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று(மார்ச் 13) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக.. வைகோ வேண்டுகோள்
தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக.. வைகோ வேண்டுகோள்

By

Published : Mar 14, 2022, 11:21 AM IST

தமிழ்நாட்டில் வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திட வேண்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைகோ எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாட்டில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த்தேக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை, குடிநீர் ஆதாரத்திற்காக அப்பகுதி மக்களால் பன்னெடுங்காலமாக வலியுறுத்திவந்த ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம், திமுக அரசின் விரைவான செயல்பாட்டின் காரணமாக நிலம் கையகப்படுத்துதல் நிலையை அடைந்துள்ளது.

ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம்

ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம்

மேலும் இத்திட்டத்தில் நிலம் கையப்படுத்துதல் பணிகளுக்காக அரசுப் பணியாளர்கள் நியமனமும், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான ஆணை மற்றும் ஓராண்டு திட்டத்திற்கான கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களிடையே அரசு மீதான நன்மதிப்பை உயர்த்தி உள்ளது.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மேலே குறிப்பிட்டவாறு வனம், சுற்றுச் சூழல் துறை விதிகளின்படி வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகிறது. வனம் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

எனவே, வன உயிரின நலக் குழுவிற்கு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகளின்படி தேவையான தகுதியான உறுப்பினர்களை நியமித்து, ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்கு தடையின்மைச் சான்று வழங்கிட வேண்டுகிறேன்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் அன்பான கவனத்திற்கு மார்ச் 10, 2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளேன்'. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'திருச்சியில் ஜெயகுமாருக்கு உற்சாக வரவேற்பு'

ABOUT THE AUTHOR

...view details