தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 18) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை காணொலி காட்சி மூலமாக விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், தீர்ப்பின் முழு விவரம் மதியம் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பையடுத்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து மேலும், தீர்ப்பின் மீதான தங்களின் பார்வையையும் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வழக்கு தொடர்பாக பதிவிட்டிருந்த வீடியோவில், "தூத்துக்குடியில் நாசக்கார நச்சாலையான வேதாந்தா குழுமபத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதிக்கும், மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. கடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இடைவிடாது போராடி வந்த மதிமுகவிற்கு இதைவிட ஓர் மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து