சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று, இலங்கை கடற்படையால் நான்கு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய வைகோ, ”மோடி அரசே உனக்கு மனசாட்சியே கிடையாதா? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய நாட்டின் பிரஜை இல்லையா? குஜராத்தி என்றால் விடுவாயா, தமிழன் என்றால் இளக்காரமா? 2 லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, கடந்த 40 ஆண்டில் தமிழ்நாட்டு மீனவர்கள் 800 மீனவர்களை கொலை செய்து கொட்டம் அடிக்கிறது.