தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராசியில்லாதவர். அவர் எந்த கட்சியில் கூட்டணி வைத்தாலும் அந்த கட்சி மண்ணை கவ்வும்” என்று அவர் மீது நீண்ட காலமாக வைக்கப்பட்ட விமர்சனத்தை அவர் தவிடு பொடி ஆக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.
10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் நுழையும் மதிமுக
தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும் வைகோ கடந்த தேர்தல்களில் கட்சி விட்டு கட்சி மாறியதாலும் அவர் எடுத்த சில முடிவகளாலும் சறுக்கலை சந்தித்தார். அப்போதிருந்தே அவர் இது போன்ற விமர்சனங்களுக்கு ஆளாகினார். ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களை பெற்ற மதிமுக நான்கு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அரியலூர் தொகுதியில் சின்னப்பா, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், வாசுதேவநல்லூர் தொகுதியில் சதன் திருமலைக்குமார், சாத்தூர் தொகுதியில் ஏ ஆர் ஆர் ரகுமான் ஆகிய மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகு ( 2006-2011-க்கு பிறகு) மதிமுக வேட்பாளர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். 2011 தேர்தலின் போது வைகோ தேர்தலை புறக்கணித்தார். 2016இல் அவர் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டார்.
உடல்நலம் குன்றிய நிலையிலும் பரப்புரையை கைவிடாத வைகோ