தமிழ்நாடு

tamil nadu

’சமஸ்கிருத திணிப்பிற்கு துணைபோகும் தமிழ்நாடு அரசு’

சென்னை: அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தைப் புகுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

By

Published : Sep 10, 2020, 12:54 PM IST

Published : Sep 10, 2020, 12:54 PM IST

vaiko
vaiko

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, ஆராய்ச்சித்துறை வரையில் திணிப்பதற்கு, தேசியக் கல்விக் கொள்கை-2020 வழி செய்கிறது என்பதால், கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு, பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க மத்திய அரசு உதவித் தொகை வழங்குவதாகவும், தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை தயாரித்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், இதற்கான இரண்டு படிவங்களை நிரப்பி, செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத் தொகை என்கிற பெயரில் நிதி உதவி செய்து, அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை புகுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'விளம்பர மோகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்கும் அதிமுக அரசு' - ஸ்டாலின் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details