தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சிலைகளை அவமதிக்கும் ஈனச்செயல்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’- வைகோ

சென்னை: திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் சாதி, மதவெறி ஃபாசிசவாதிகள் அவமதித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

vaiko
vaiko

By

Published : Jul 30, 2020, 4:11 PM IST

பேரறிஞர் அண்ணாவின் சிலை மீது காவித்துணி கட்டியது தமிழ் அன்னையையே களங்கப்படுத்தியதற்கு சமமாகும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், " கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவித்துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.

தமிழ்நாட்டில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வந்த சாதி, மதவெறி ஃபாசிசவாதிகள் தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில சக்திகள் முனைப்பாக உள்ளன. மேலும் இதுபோன்ற காலித்தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details