சென்னை: ராஜிவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர், "மருந்தாளர்கள் தினத்தை முன்னிட்டு பட்டதாரி மருந்தாளர்கள் சங்கங்கள் இணைந்து ரத்த தானம் செய்து வருகின்றனர்.
கரோனா பாதிப்பு விகிதம் தற்போது ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது, இது கவலையளிக்கிறது. பல்வேறு தளர்வுகள் இருந்தாலும், கரோனா சூழ்நிலையை புரிந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
முதியோர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்
18 வயதுக்கு மேற்பட்ட 56 விழுக்காடு பேர் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணையை பொறுத்தவரை 17 விழுக்காடு பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.
சுகாதார கணக்குப்படி 22 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளவில்லை என தெரிகிறது. முதியோர் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.