சென்னை, செனாய் நகர், கந்தன் தெருவைச் சேர்ந்த விஜயன் (68) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். விஜயனுக்கு மனைவி நளினி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் விஜயன் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வெங்கடாஜலபதி தெருவில் உள்ள அம்மா கிளிக்கினில் கரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். ஆனால் அதன் பிறகு காய்ச்சல், உடல் வலியால் விஜயன் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல்.04) மீண்டும் கிளினிக் சென்று இது குறித்து விஜயன் தெரிவித்தபோதும், அங்கு மாத்திரை கொடுத்து அவரை அனுப்பியுள்ளனர்.
ஆனாலும் தீராத வலியால் அவதிப்பட்டு வந்த விஜயன் நேற்றிரவு இரண்டு மணியளவில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தூக்கிட்ட நிலையில் இருந்த விஜயனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், சேத்துப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை! - Corona virus
சென்னை: செனாய் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 10 நாள்களுக்கு முன்னர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், வலி தாங்க முடியாமல் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Corona dead
இத்தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து விஜயனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விஜயன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட வலியால் இறந்தாரா அல்லது வேறு காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் ’இட்லி அம்மா’வுக்கு சொந்த வீடு: சொன்னதை செய்து காட்டிய ஆனந்த் மஹிந்திரா!