சென்னை விமான நிலையத்தில் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் உரிமைகளை மத்திய அரசு அடித்துக் கொண்டிருக்கிறது. எதையுமே எதிர்க்காமலும், கேள்வி கேட்காமலும் தமிழரின் உரிமையும் தமிழ் நிலத்தின் உரிமையைப் பாதித்தாலும் பேசாமல் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு உள்ளது.
”மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வேண்டும்” - கௌதமன் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு அரசு உடனடியாக மண்ணின் மைந்தர்களுக்கு 90 விழுக்காடு வேலைவாய்ப்பு என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் 90% வடமாநில மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில் தமிழர்கள் வெறும் 10க்கும் குறைவாகத் தான் உள்ளனர். இதை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதேபோல் திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் 300 பேர் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அண்ணா அவர்கள் போராடி தமிழ்நாடு என்ற பெயரை வைத்தார். நீங்கள் வேண்டுமானால் பாஜகவுக்கு அடிமை நாடு எனப் பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்.
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ இல்லத்திற்கு தமிழ்நாடு அரசு சென்று அரசின் சார்பில் அவர்களைப் பார்த்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும். இனியாவது அரசு வேடிக்கை பாராமல் அந்த குடும்பத்தினருக்கு பெரும் நிதியை வழங்க வேண்டும். மேலும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.