மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் நேற்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக 25,000 கிலோ அரிசி மூட்டைகளை அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கினார்.
கருணாநிதி பிறந்த நாள் - அரிசி மூட்டைகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அரிசி மூட்டைகளை வழங்கினார்.
youth
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக, திமுக இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை, திருவள்ளூர், காஞ்சிபுரம் இளைஞர் அணி அமைப்பாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க: கடன் வாங்க வலியுறுத்தும் பள்ளிகள் - ராமதாஸ் கடும் கண்டனம்