தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமெரிக்க உளவு நிறுவன செய்தியாளர் கைது! - US News Organisation Journalist arrest in Chennai central staion

சென்னை: அமெரிக்க உளவு நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

US News Organisation Journalist arrest in Chennai central staion

By

Published : Oct 11, 2019, 4:36 PM IST

Updated : Oct 11, 2019, 4:47 PM IST

அமெரிக்க உளவு நிறுவனத்தால் இயக்கப்படும் ரேடியோ ஃப்ரி ஏசியா என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை சென்னை சென்ட்ரல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒருவர் அமெரிக்க உளவு நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் ரேடியோ ஃப்ரி ஏசியா என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கியால்ட்சன் சோயடக் (Gyaltsen Choedak) என்றும், மற்றொருவர் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பீமா நகோடப்(55) என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் திபெத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கியுள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியின் முன் திபெத்தியர்கள் ஐந்து பேர் போராட்டம் நடத்தியதால், சந்தேகத்தின் பேரில் இவர்களைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க... ஐ.டி.சி. சோழா நட்சத்திர விடுதி வந்தடைந்தார் ஜி ஜின்பிங்!

Last Updated : Oct 11, 2019, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details