கரோனா தொற்று பரவலையடுத்து, நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதம் 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ளதன் காரணமாக தற்போது சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.