சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்.27) கேள்வி பதில் நேரத்தில், தர்மபுரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் நகர்ப்புறப்பகுதிகள் அதிகம் உள்ளன. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 45.38% ஆக இருந்த நகர்ப்புற மக்கள் எண்ணிக்கை, தற்போது 53% ஆக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 28 பேருராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 90-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை தரம் உயர்த்தலாமா என ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாநிலம் முழுவதும் பொருளாதார நிலை, வருமானம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து சமர்ப்பிக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்" என்றார்.
இதையும் படிங்க:திராவிட இயக்கத்தின் தனித்துவத்தால் தமிழ்நாடு முன்னேற்றம் - பழனிவேல் தியாகராஜன்