சென்னை:தமிழ்நாட்டில் தற்போது ஒமைக்ரான் தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் திங்கள்கிழமை (பிப்.7) முதல் மீண்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் முழுக்க முழுக்க நேரடி விசாரணையாக இல்லாமல், நேரடி விசாரணை முறை மற்றும் காணொலி காட்சி விசாரணை முறை எனக் கலப்பு முறையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அறைகளை கரோனா கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டுத் திறக்க அளிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்கள், நூலகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேரடி விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிடும் மனுதாரர்கள், வழக்காடிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்தலின் பேரில், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: TN Urban Local Body Elections 2022: கோவையில் பல கெட்டப்களில் வந்து வேட்புமனு தாக்கல்