தேசத்தந்தை என்று போற்றப்படும் உத்தமர் காந்தியடிகளின் 73ஆவது நினைவு நாளான இன்று அரசு அலுவலர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல்பாண்டியன் தலைமையில் அனைத்து அலுவலர்களும், தீண்டாமை எந்த வழியில் இருப்பினும் அதனை ஒழிக்கப் பாடுபடுவோம் என தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றனர்.
காந்தி நினைவு நாள்: அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு! - காந்தி நினைவு நாள்
சென்னை: உத்தமர் காந்தியின் 73ஆவது நினைவுநாளை முன்னிட்டு அரசு அலுவலர்கள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
memorial
அதேபோல், சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதையும் படிங்க: உத்தமர் காந்தி நினைவு நாள்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு