தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை பல்கலைக்கழகத்திற்கு 88 கோடி நிதி பற்றாக்குறை: துணைவேந்தர் கௌரி - சென்னை பல்கலைக்கழகத்திற்கு 88 கோடி நிதி பற்றாக்குறை

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் 88 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் அதனை சரி செய்ய தமிழ்நாடு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் கௌரி பேட்டி
துணைவேந்தர் கௌரி பேட்டி

By

Published : Mar 28, 2022, 5:52 PM IST

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி இன்று (மார்ச் 28) தொடங்கி வைத்தார். இதில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ராமசாமி பேசியதாவது, "சென்னை பல்கலைகழகத்தின் தரம் குறைந்துவிட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது. இந்தக் கருத்து உண்மையாக கூட இருக்கலாம் நமக்கு தெரியவில்லை. இதனைச் சரி செய்ய வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்காகவே ஆசிரியர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கி உள்ளது. விருப்பமில்லாத மாணவர்கள் விரும்பும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தான் பதிவாளராக இருந்த காலத்தில் தமிழ் ஆய்வுக் கட்டுரை ஒன்று வந்தது. அந்தக் கட்டுரையின் தலைப்பை பார்த்த பின்னர் நான் அனுப்ப மாட்டேன் என தெரிவித்தேன்.

அந்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு திரைத்துறையில் நடிகை சில்க் ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் தமிழ் ஆராய்ச்சியில் ஒருவர் சமர்ப்பித்தார். அதனை நான் ஏற்கவில்லை, நான் அங்கிருந்து அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சென்ற பத்து நாள்களில் அந்த ஆய்வுக் கட்டுரை ஏற்றுக்கொண்டு, முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. இப்படி இருந்தால் எப்படி கல்வித்தரம் உயரும்" என்றார்.

துணைவேந்தர் கௌரி பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி கூறியதாவது, "சென்னை பல்கலைக்கழகத்திற்கு நிதி சுமை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நிர்வாகத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டத்தை மீறி சம்பள உயர்வு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை குழு பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளது. அவற்றை சரிசெய்து அரசிடம் இருந்து வரவேண்டிய தொகை திரும்ப பெறுவதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் விதிமுறைகளை மீறி அளிக்கப்பட்ட கூடுதல் தொகையை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் நிதி சுமையை சரி செய்ய தமிழ்நாடு அரசிடம் தற்காலிகமாக 88 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு 12 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக நவீன தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆன்லைன் மூலமாகவும் புதிய பாடத் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பல கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளாக இணைப்பு கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். அதனை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு துறை வாரியாக பேராசிரியர்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்களுக்கு என்று பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் எதிர்ப்பு மசோதா.. அடித்து ஆடும் திருமாவளவன்!

ABOUT THE AUTHOR

...view details