தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பன்முகத் தன்மைக் கொண்ட உயர்கல்வி நிலையங்கள்... பல்கலைக் கழக மானியக்குழு கடிதம்... - புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

பன்முகத் தன்மைக் கொண்ட உயர்கல்வி நிலையங்கள்
பன்முகத் தன்மைக் கொண்ட உயர்கல்வி நிலையங்கள்

By

Published : Sep 4, 2022, 1:36 PM IST

சென்னை:பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்குப் பல்கலைக் கழக மானியக்குழு அனுப்பி உள்ள கடிதத்தில், ”நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பன்முக தன்மை வாய்ந்த உயர்கல்வி நிலையங்களாக மாற்றுவது குறித்து புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2,035 ஆண்டுக்குள்ளாக இந்த இலக்கை அடைய வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

ஆகவே பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பன்முகத்தன்மை வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர் பல்லைக்கழகங்கள், பட்டமளிக்கும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் என்று மூன்று வகையான உயர்கல்வி நிலையங்களை 2035ஆம் ஆண்டிற்குள் பன்முக தன்மை வாய்ந்த உயர்கல்வி நிலையங்களாக ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்படுகிறு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக்

ABOUT THE AUTHOR

...view details