சென்னை:அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் இன்று (அக்.13) ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட உணவு டெலிவரி செய்யப்பட்ட பின், வாடிக்கையாளர் அதனை சாப்ப்ட்டார்.
அப்போது, சிக்கன் வேக வைக்காமல் இருந்தததாக தெரிகிறது. இது குறித்து, KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது ட்விட்டர் பக்கத்தில், நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு, SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றை tag செய்து பதிவிட்டார்.