இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நலத்துறை சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
12:58 May 29
சென்னை: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதில், கரோனா தொற்றால் தாய் - தந்தையை இழந்த குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனை, பயனாளர்கள் 18 வயது பூர்த்தியாகும் போது வட்டித் தொகையுடன் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், இலவச கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என அதற்குண்டான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது வரை பெற்றோரை இழந்த குழந்தைகள் 7 பேரும், தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகள் 100 பேரும் என இதுவரை 107 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிதி உதவிகள் சமூக நலத்துறை மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.