சென்னை:உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் கடந்த பிப்.26ஆம் தேதியிலிருந்து ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. போர் சூழல் காரணமாக அங்கிருந்து எப்படியாவது நாடு திரும்பினால் போதும் என அனைவரும் தவித்து வரும் சூழலில், வந்தால் தன்னுடைய செல்ல பிராணியுடன்தான் நாடு திரும்புவேன் எனக் காத்திருந்த மாணவி கீர்த்தனா நேற்று (மார்ச் 5) சென்னை வந்தடைந்தார்.
செல்லப்பிராணி மீது பாசம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா. இவர் உக்ரைனில் உள்ள உஸ்ராத் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 5ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனில் அந்த நாய்க்குட்டியை வாங்கியதாகவும், மிகவும் பாசமாக வளர்த்து வருவதாகவும், என்னைப் பிரிந்து இருக்காது என்பதால் கரோனா தொற்று காலத்தில் கூட இரண்டு ஆண்டுகள் வீட்டிற்கு வராமல் நாயுடன் அங்கேயே இருந்தேன் என்று கீர்த்தனா கூறினார்.