இது குறித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தற்போது கரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள், மாணாக்கர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து விலகிய மாணாக்கரின் கல்விக் கட்டணத்தை முழுமையாக கல்வி நிறுவனங்கள் அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.