நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, “ புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, அதில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதங்களை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும்.
அதன் மூலமாக புதிய கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு பணியை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக மேற்கொண்ட பணிகளை உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை - விழிப்புணர்வு ஏற்படுத்த யூஜிசி கடிதம் இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை: 'எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசு'