சென்னை: உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் பணி தீவிரம்!
பொதுமக்கள் கருத்துக்களின் அடிப்படையிலான புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை 2020
இது குறித்து பல்கலைக் கழக மானியக்குழு அனைத்து துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை விரைந்து அனுப்ப வேண்டும். மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்களிடம் கேட்ட கருத்துக்களை தொகுத்து அனுப்ப வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.