தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அறைக்கு ஒரு மாணவர்; உணவுகளை பகிரத்தடை - உயர்கல்வித்துறை குழப்பம்! - கரோனா விதிமுறைகள்

சென்னை: கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

reports
reports

By

Published : Nov 9, 2020, 2:55 PM IST

கல்லூரிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள நிலையில், அவற்றில் பல நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதால் உயர்கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் ஆரோக்கிய செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறைக்குள் வரும் முன்னர் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.
  • கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறைகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும்.
  • கல்லூரிகளுக்கு வருவதற்கு முன்பாக மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் மாணவர்கள் கும்பலாக கூடக்கூடாது.
  • மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
  • உணவுகளை பகிர்ந்து சாப்பிடக்கூடாது.

என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு விதித்திருக்கிறது.

மேலும், மாணவர்கள் மனநல ஆலோசனை பெறுவதற்காக ’8445440632' தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், தமிழகத்தில் விடுதிகளை திறக்காமல் எப்படி கல்லூரிகளை நடத்துவது என்பதில் உயர்கல்வித்துறை குழப்பம் அடைந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனைக்குப் பிறகே இதில் முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details