சென்னை: உகாண்டா நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு பாரா பேட்மிண்டன் 2021 போட்டியில் (Uganda para badminton) இந்திய வீரர்கள் 45 பதக்கங்களைக் குவித்தனர். அதில் தமிழ்நாட்டு வீரர்கள் எட்டு பேர் பங்கேற்று 12 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.
இந்த நிலையில், தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு வீரர்கள் இன்று (நவம்பர் 24) சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய வீ. மெய்யநாதன், "பன்னாட்டு பாரா பேட்மிண்டன் போட்டி 2021 உகாண்டா நாட்டில் (Uganda para badminton international 2021) அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.