தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - பறவைக் காய்ச்சல்

இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், முட்டைகள் மற்றும் கோழி இனம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடைசெய்து திருப்பி அனுப்பப்படுகிறது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

By

Published : Jan 12, 2021, 5:25 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட பறவைக் காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்,கேரள மாநிலத்தின் எல்லை ஓரத்தில் அமைந்துள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும்.


இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், முட்டைகள் மற்றும் கோழி இனம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடைசெய்து திருப்பி அனுப்பப்படுகிறது. கோழி முட்டைகளை நன்றாக வேகவைத்து உண்டால் பறவைக் காய்ச்சல் வராது என தெரிவித்தார்.

கேரள மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள், தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details