சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணிச் செயலாளர் எழிலரசன் ஆகியோர் சந்தித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மாணவர்கள் தற்போதுள்ள சூழலில் தேர்வு எழுதும் மனநிலையில் இல்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயல்பு நிலை திரும்பியவுடன் தேர்வை நடத்த வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.
செங்கோட்டையனிடம் உதயநிதி ஸ்டாலின் நேரில் மனு! - பத்தாம் வகுப்பு
சென்னை: இயல்பு நிலை திரும்பும் வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி திமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
stalin
தகுந்த இடைவெளியுடன் ஒரு வகுப்புக்கு 10 மாணவர்கள் என்று தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அரசு கூறுகிறது. ஆனால், இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசு விளக்க வேண்டும். தங்கள் மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு நல்ல முடிவை ஓரிரு நாளில் அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் “ என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு! - பணிகள் தீவிரம்!
Last Updated : May 20, 2020, 6:49 PM IST