தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரஜினி மன்னிப்பு கேட்பார் - உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் - ரஜினி

சென்னை: காவிரி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டது போல் பெரியார் விவகாரத்திலும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

speech
speech

By

Published : Jan 21, 2020, 4:30 PM IST

திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ’ரஜினிகாந்த் தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி விவகாரம் தொடர்பாக பேசிவிட்டு பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார். அதைபோல் பெரியார் தொடர்பான தனது கருத்திலும், உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்புக் கேட்பார்’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஜினி நிச்சயம் மன்னிப்பு கேட்பார்

ABOUT THE AUTHOR

...view details