சென்னைசாந்தோமில் நடைபெற்ற "சர்வதேச கழிப்பறை திருவிழாவில்" சட்டபேரவை உறுப்பினர்கள் உதயநிதி, வேலு, திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி, மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்னர். இந்த நிகழ்ச்சியில் 600 தூய்மைப்பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் சாதனங்களை சட்டபேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கழிவறைக்கு செயலி:மேடையில் பேசிய சென்னை மேயர் பிரியா, 'நான் கல்லூரி படிக்கும் போது, பொது கழிப்பறை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். ஆனால், பயன்படுத்த யோசிப்போம். சுகாதார சீர்கேடு இருக்கும் என்பதால் பயன்படுத்த யோசிப்போம். ஆனால், பலருக்கு சுகர் போன்ற பிரச்சனைகள் இருக்கும், அவர்களுக்கு பொது கழிப்பறை தேவை அதிகம். தற்போது கக்கூஸ் செயலியில் சென்னை மாநகரில் 1000க்கும் அதிகமான டாய்லெட் விவரம் உள்ளது. இது அனைவரும் பொதுக் கழிவறையை பயன்படுத்த இந்த செயலி உதவும்' என குறிப்பிட்டார்.
புதிய திட்டம்: நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், 'பொது கழிவறைகளை அதிகப்படுத்த மற்றும் ஏற்கனவே உள்ள பொது கழிப்பறைகளை மேம்படுத்த புதிய திட்டதை தயாரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் பொது கழிப்பிடங்களை கட்டி தர முன்வர வேண்டும்' என தெரிவித்தார்
நிகழ்ச்சியில் மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'கரோனா பரவலின் பொழுது தூய்மை பணியாளர்களால் நோய் தொற்று அதிக அளவில் பரவாமல் தடுக்கப்பட்டது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் கரோனா தடுப்பு ஊசிகள் போடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நான் அப்பொழுது அங்கு உள்ள பொதுக் கழிப்பறைகளை ஒவ்வொரு நாளும் சென்று ஆய்வு செய்தேன்.