பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் 'இந்தியாவின் அணு கொள்கை மாற்றப்பட்டு வருகிறதா?’ என்ற தலைப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தியாகு, பச்சைத் தமிழகம் தலைவர் உதயகுமார், பத்திரிகையாளர் பன்னீர்செல்வம், பேராசிரியர் அச்சின் வானியக் உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவித்து பேசினர். கருத்துரங்கின் இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து #WeStandWithNBA என்னும் வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி அணு ஆயுத போருக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.