சென்னை: எம்.கே.பி நகரைச் சேர்ந்தவர், ஜோசப். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது வாகனம் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஜோசப், இருசக்கர வாகனம் காணாமல்போனது குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.