தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெடி மருந்துகளுடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் குற்றவாளி என தீர்ப்பு - இலங்கை தமிழர்கள் இரண்டு பேர் குற்றவாளி

வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் 2 பேரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கை தமிழர்கள் இரண்டு பேர் குற்றவாளி
இலங்கை தமிழர்கள் இரண்டு பேர் குற்றவாளி

By

Published : Oct 16, 2022, 1:04 PM IST

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு சங்கேகத்திற்கிடமாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சங்கர் நகர் காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ஜேசு ராஜா(எ)ராஜேந்திரன், கணேசன் என்பதும் இருவரும் இலங்கை தமிழர்கள் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக அவர்கள் வெடிகுண்டு செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொண்டு இலங்கை செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சங்கர் நகர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். இருவருக்குமான தண்டனையின் விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:காணாமல் போன பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு - தகாத உறவினால் விபரீதம்

ABOUT THE AUTHOR

...view details