தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மோடிக்கு எதிராக துண்டு பிரச்சாரம் கொடுத்த மதுரை சகோதரிகள் கைது - முதல்வர் நூல் வெளியீட்டு விழா

முதலமைச்சர் நூல் வெளியீட்டு விழாவின்போது நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகே பிரதமர் மோடிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த மதுரை சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடிக்கு எதிராக துண்டு பிரச்சாரம் கொடுத்த மதுரை சகோதரிகள் கைது
மோடிக்கு எதிராக துண்டு பிரச்சாரம் கொடுத்த மதுரை சகோதரிகள் கைது

By

Published : Mar 1, 2022, 11:02 PM IST

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று (பிப். 28) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது வர்த்தக மையத்தின் நுழைவுவாயில் அருகே நின்று கொண்டு இரண்டு பெண்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அதில் இந்திய மக்களைக் கொள்ளையடித்து, குஜராத் கொள்ளையர்களை வளர்க்கும் மோடி ஆட்சியை வீழ்த்தாமல், இந்திய மக்களுக்கு வாழ்வு இல்லை என்றும் இவிஎம் மிஷின்களை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் இரண்டு பெண்களையும் நந்தம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் மதுரையைச் சேர்ந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவிகள் நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (26) என்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் இந்த மாணவிகள் பல்வேறு இடங்களில் இதுபோன்று போராட்டம் நடத்தி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, நந்தம்பாக்கம் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவலருக்கு ஜாமீன்

ABOUT THE AUTHOR

...view details