சென்னை: சென்னை கொடுங்கையூர் அம்மன் கோவில் அருகே சிலர் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் மங்களாபுரத்தை சேர்ந்த சூர்யா (23) மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த ஜெயபால்(30) என்பதும், இவர்கள் இருவரும் ரவுடியாக இருந்து வந்ததும், இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.