தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரபல ரவுடிக்கு ஆதரவு - மேலும் 2 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - பிரபல ரவுடி கடல் ஜோதி

சென்னையில் பிரபல ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஏற்கெனவே இரண்டு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிரபல ரவுடிக்கு ஆதரவு
பிரபல ரவுடிக்கு ஆதரவு

By

Published : Sep 21, 2022, 5:03 PM IST

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான கடல் ஜோதி மீது கிண்டி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் ரவுடி கடல் ஜோதி காவலர்களிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இந்த நிலையில் கடந்த தேர்தலின்போது பேசப்பட்டதாக கூறப்படும் அந்த ஆடியோவில் 6ஆயிரம் சதுர அடி நிலத்தில் கட்டப்படும் வீடு ஒன்றை காவலர் திருமாலுக்குத் தர இருப்பது போல ஆடியோ முடிகிறது. அதே போல தலைமைக்காவலரான ஏகாம்பரம் கூலிப்படைத் தலைவன் மதுரை பாலாவிற்கு, கடல்ஜோதி அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக உயர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டது பற்றி தெரிவிப்பது போன்றும் ஆடியோவில் வெளியானது.

இந்த ஆடியோ வைரலான நிலையில், ரவுடி கடல்ஜோதிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கிண்டி தலைமைக் காவலரான ஏகாம்பரம் மற்றும் காவலர் திருமால் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் துறை ரீதியான விசாரணையில், மேலும் சில காவலர்கள் ரவுடியுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததையடுத்து, கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவைச்சேர்ந்த தனிப்படை காவலர் கருப்பையா மற்றும் சைதாப்பேட்டை உளவுப்பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ரவுடியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details