தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வடமாநில இளைஞர் உள்பட இருவர் தூக்கிட்டுத் தற்கொலை! - Chennai TVK Nagar

சென்னை: திருவிக நகரில் காவல் துறையினரின் விசாரணைக்குப் பயந்து வடமாநில இளைஞர், அவரது உறவின இளம்பெண் ஒருவருடன் இணைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

hang
hang

By

Published : Apr 18, 2021, 9:19 AM IST

சென்னை திரு விக நகர் 4ஆவது தெருவில் வசித்துவந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கணேஷ்யூ மாண்டல் (27) 15 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்துவந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தனது மனைவி, மகனை மேற்கு வங்கத்தில் விட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 17) அவசர அவசரமாக கே.சி. கார்டன் இரண்டாவது தெருவில் ஒரு வீட்டில் உள்ள அறையை தன்னிடம் வேலைசெய்யும் சௌமித்ரா என்பவருக்கு வீடு வேண்டும் எனக் கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.

வீட்டின் உள்ளே மின்விசிறி மாற்றுவதாகக் கூறிச் சென்ற கணேஷ்யூ நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த சௌமித்ரா, ஜன்னல் வழியே பார்த்தபோது கணேஷ்யூ, 18 வயது இளம்பெண் ஒருவருடன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிக நகர் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே வசித்துவந்த வீடு அருகில் உள்ள நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்காகவே இந்த வீட்டை அவசர அவசரமாக வாடகைக்கு எடுத்து உள்ளே வந்தது தெரியவந்தது.

இவர் கடந்த புதன்கிழமை தனது மனைவியின் தங்கையை மேற்கு வங்கத்திலிருந்து அழைத்துவந்துள்ளதாகவும், இது குறித்து அங்கு உள்ள உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details