தலைமைச் செயலகத்தில் பொது கணக்கு குழு பிரிவில் பணியாற்றும் அலுவலக உதவியாளர், மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செவ்வாய் பேட்டையைச் சேர்ந்த அலுவலக உதவியாளரும், குரோம்பேட்டையைச் சேர்ந்த தட்டச்சரும், நேற்று முன்தினம் கரோனா கண்டறியும் சோதனை செய்த நிலையில், அவர்களுக்கு தற்போது கரோனா உறுதியாகியுள்ளது.
தலைமைச் செயலக பணியாளர்கள் இருவருக்கு கரோனா - தலைமைச் செயலகம்
சென்னை: தலைமைச் செயலகத்தில் பொது கணக்குக் குழு பிரிவில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைமைச் செயலகத்தில் இயங்கி வந்த பொது கணக்குக் குழு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களையும் கரோனா பாதித்த நிலையில், தலைமைச் செயலக பணியாளர்கள் மட்டும் தொற்றுக்கு ஆளாகாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், அங்கு பணியாற்றும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள மற்ற ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து விமான நிலையத்திற்கு வந்த மருத்துவ உபகரணங்கள்!