தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி ஆவணங்கள் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மோசடி - இருவர் கைது - chennai district

போலி ஆவணங்கள் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மோசடி செய்த இருவரை சென்னை துரைப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Oct 10, 2021, 11:06 PM IST

சென்னை: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருபவர் சீனிவாசன். இவர் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூமில் பஜாஜ் பைனான்ஸில் ஜீரோ சதவிகித வட்டியில், பொருட்களை வாங்கியதில், போலி ஆவணங்களை கொடுத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி மோசடி செய்ததாக 2 பேர் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

குற்றவாளி
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் துரைப்பாக்கத்தை சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வீரமணி எனத் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ஷோரூம்களில் இதேபோன்ற பானையில் போலி ஆவணங்களைக் காட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details